தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.31வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் இடங்களில் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இதுவரை சுமார் 11.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் 1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். தற்போதைய நிலையில் 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வருகிற திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு