தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பாஜ தேசிய தலைவர் இன்று வருகிறார்: நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜ தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், 2 நாட்கள் பயணமாக அவர் இன்று காலை தமிழகம் வருகிறார். மதுரை வரும் அவர் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக காலை 11 மணி அளவில் மதுரை விமானம் நிலையம் வருகிறார். அவருக்கு பாஜவினர் வரவேற்பு அளிக்கின்றனர். மதுரை தனியார் ஓட்டலில் தமிழக பாஜ முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அதை தொடர்ந்து, காரைக்குடிக்கு செல்லும் அவர் அன்று மாலை 3.30 மணிக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மாநில நிர்வாகிகளுடன் மாலை 5 மணிக்கு சந்தித்து விவாதிக்கிறார். தொடர்ந்து இரவு 7 மணி நடைபெறும் நடைபயணத்தில் பங்கேற்கும் அவர், இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசுகிறார். அடுத்த நாள் காலை 9.15 மணிக்கு காரைக்குடியில் உள்ள பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் தரிசனம் செய்கிறார். அதை தொடர்ந்து 10.30 மணிக்கு நடைபெறும் பிற்பட்ட, மிக பிற்பட்ட அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்துகிறார்.அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ எப்படி செயல்பட வேண்டும் என்பது நிர்வாகிகளுடன் கருத்துகளை கேட்கிறார். பின்னர் சிவகங்கை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் மாலை 5.10மணிக்கு திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டி சகோதரர்கள் நினைவு இல்லத்தை பார்வையிடுகிறார். அதை தொடர்ந்து மதுரையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார்….

Related posts

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு தாமரை சின்னம்; தேர்தல் பிரசார விதிமீறிய வழக்கில் அமித்ஷா, கிஷன் ரெட்டி பெயர்கள் நீக்கம்

நாட்டுக்காக சாக தேவையில்லை வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்: குஜராத் விழாவில் அமித் ஷா பேச்சு