தமிழகத்தில் 89 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழக  மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 16,319 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 89 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டது. 499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த 64 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று உயிரிழப்பு இல்லை. இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 38,025 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் செங்கல்பட்டில் நேற்று அதிகபட்சமாக 42 பேருக்கும், சென்னையில் 30 பேர், காஞ்சிபுரம் 5 பேர், கோவை, திருவள்ளூர், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், கடலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற 29 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை….

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை