தமிழகத்தில் 80 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டால் கொரோனா 2வது அலை பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்: கொரோனா பரவல் அக்டோபரில் குறைய வாய்ப்பு; அரசு டாக்டர் தகவல்

சென்னை: தமிழகத்தில் 80 சதவீதம் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால், கொரோனா 2வது அலை பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராமலிங்கம் தெரிவித்தார். இது குறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராமலிங்கம் கூறியதாவது: கொரோனாவை அறிவியல் பூர்வமாக கையாள வேண்டும். கொரோனாவை நாம் தான் பரப்புகிறோம். நாம் தனிமைப்படுத்துவதை தவறுவதாலும், முகக்கவசத்தை அணியாததாலும், கூட்டத்தை கூட்டுவதால் கொரோனா எளிதாக பரவி விடுகிறது. அது மனித உடலுக்கு செல்லும்போது அது எத்தனை பேருக்கு பரப்ப முடியுமோ அத்தனை பேருக்கு பரப்பும். தற்போது, 2வது அலை ஏற்பட்டுள்ளது. இந்த அலையில் 80 சதவீதம் பேர் பாதிக்கப்பட போகிறோமோ, இல்லை குறைத்து விட்டால் மூன்றாவது அலை, நான்காவது அலையில் கொஞ்சம், கொஞ்சமாக பாதிப்பார்கள். இந்தியாவில் 2வது அலை அதிகமாக உள்ளது. அடுத்து அமெரிக்கா போன்ற ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது அலை அதிகமாக இருக்கும். இப்படி மாறிமாறித்தான் வரும். 100 சதவீதத்தில் 80 சதவீதம் பேர் பாதிப்படைய செய்யும். நாம் பண்ண வேண்டியது இரண்டு விஷயம். இயற்கையாக நாம் கொரோனாவை தடுக்க வேண்டும். மற்றொன்று செயற்கையாக கொரோனாவை தடுக்க வேண்டும். இயற்ககையாக என்றால் சமூக பாதுகாப்பு தான். செயற்கையாக தடுப்பது என்றால் தடுப்பூசி. அதாவது 80 சதவீதம் மக்கள் தடுப்பூசி போட்டால் பாதுகாப்பு. இஸ்ரேலில் 60 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டு விட்டனர். இதனால், அந்நாட்டு அரசு கொரோனாவில் இருந்து விடுவித்து விட்டோம். இனி எப்போதும் போல் இருக்கலாம் என்று அறிவித்துள்ளது. அது போன்று இங்கும் தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை வேகமாக, போட வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நோயின் தாக்கம் குறைவு. அவர்களை பற்றி நாம் இந்த நிமிடம் கவலைப்பட வேண்டாம். 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும். இப்போதைக்கு முதலாவதாக தனி மனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இரண்டாவது தடுப்பூசியை வேகமாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி கொடுத்தால் தமிழகத்தை நாம் காப்பாற்றி கொள்ள முடியும். மூன்றாவது, கொரோனா அலையை தள்ளி போட முழு ஊரடங்கு அத்தியாவசியம். சென்னை, செங்கல்பட்டு மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தான் பாதிப்பு இருக்கிறது. எனவே, கிராமப்பகுதிகளில் இருந்து நகர்ப்புற பகுதிகளுக்கு மக்கள் வருவதை தடுக்க வேண்டும். நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் பாதித்து கொண்டே இருக்கும் போது, கிராமப்புறத்துக்கு போக்குவரத்து இருந்தால், பாதிப்பு கிராமப்பகுதியை நோக்கி செல்லும். நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் தடுப்பூசி போட வேண்டும். அப்படி செய்தால் 5 மாதங்களில் பாதிப்பின் தன்மை குறைத்து விட முடியும். இவ்வாறு அவர் கூறினார். * மத்திய அரசால் கொரோனா தொற்று ஒழிப்பில் தொய்வுமுன்னேறிய மாநிலங்களில் தடுப்பூசியை போட்டு இருப்பார்கள். ஆனால், இங்கு தடுப்பூசி வாங்க விடுவதில்லை. அதேபோல் ஆக்சிஜன் வாங்குவதையும் மாநிலத்திடம் விட வேண்டும். மாநில அரசுகள் தங்களது வேலையை பார்க்க விட்டால், அவர்கள் பாதுகாப்பார்கள். ஆனால், நாம் மத்திய அரசை சார்ந்து இருப்பதால், நமக்கு தொய்வு ஏற்படுகிறது. இதனால், சிகிச்சை அளிக்க கஷ்டமாக உள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க முடியாத நிலை உள்ளது.* தொற்று குறைப்பு யார் கையில்?எல்லோரும் கொரோனாவால் பாதிக்கப்படத்தான் போகிறார்கள். ஆனால், அதை இந்த வருடமா, அடுத்த வருடமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். கை சுத்தம், முக கவசம், சமூக இடைவெளியை மேற்கொள்வதை தொடர்ந்து நாம் செய்தால் பாதிப்படையாமல் தடுத்து விடலாம். இதை எத்தனை வருடத்திற்கு நாம் செய்யப்போகிறோம் என்பதை அந்த கொரோனா முற்றிலும் இறங்கும் வரை செய்து தான் ஆக வேண்டும்.* நுரையீரலை குறி வைக்கும் வைரஸ்கொரோனா வைரஸ் உருமாறி நுரையீரலை தாக்கும் அளவுக்கு சக்தி பெற்றுள்ளது. 2வருடத்திற்கு ஒரு முறை இந்த வைரஸ் மீண்டும் ஒருவரை பாதிக்கலாம். எனவே, தடுப்பூசிதான் தீர்வு. கொரோனா வைரஸ் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் போட்டு 2 வாரம் கழித்து தான் பாதுகாப்பு தன்மை அதிகமாகிறது. தடுப்பூசி போட்ட 6 வாரங்களுக்குளு் கொரோனா வந்தால் அது இயற்கையாக வருவது தான். தடுப்பூசி போட்ட பிறகு வருவது என்று கூறுவது முற்றிலும் தவறு.* கொரோனா பரவலை ஆண்டுக்கணக்கில் இழுக்க வேண்டும்மருத்துவர் மேலும் கூறுகையில், சமூக பாதுகாப்பு என ஒன்று இருக்கிறது அதாவது சமூக நோய் எதிர்ப்பு சக்தி. சமூக அளவில் 80% பேருக்கு பாதிக்கப்பட்டால் அதற்கு மேல் அதனால், பரவ முடியாது. அந்த கொரோனா  வைரஸ்தொற்று அதை நோக்கி தான் செல்லும். 80% ஒரே வருடத்தில் பாதிப்படைகிறோமா அல்லது 10 வருடத்தில் பாதிப்படைகிறோமா என்று நமது கையில் தான் உள்ளது. ஆனால், ஒரே வருடத்தில் பாதிப்படையும் போது 100ல் 2 பேர் இறப்பார்கள். 80 % மக்கள் தொகை பாதிக்கப்படும் போது 2% மக்கள் இறக்கும்போது, அந்த நேரத்தில் இறப்பு விகிதம் நம்மால் தாங்க முடியாது. ஒரே வருடத்தில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டால், இறப்பு விகிதமும் லட்சத்தில் வருகிறது’’ என்றார். 10 வருடம் அந்த பாதிப்பை இழுத்தால், இறப்பு விகிதம் என்பதை குறைக்க முடிகிறது. நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் கொரோனா பாதிப்பை நாம் இழுக்க வேண்டும். அது அலையாய் தான் வரும். பரவும் போது அலையாய் தான் பரவும். முதல் அலை முடிந்து விட்டது.* ஊரடங்கால் அலையின் வேகம் குறையும்வைரஸ் நோய் தொற்று அதிகம் இருப்பதால்தான் ஊரடங்கை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கை பயன்படுத்தினால் அலையின் வேகம் கொஞ்ச நாளைக்கு குறையும். முதல் அலையில் மார்ச் ஊரடங்கில் பிறப்பித்து விட்டோம். ஆனால், ஆகஸ்ட், செப்டம்பரில் தான் இறங்க ஆரம்பித்தது. இரண்டாவது அலையில் ஊரடங்கு பிறப்பிக்காத நிலையில், அந்த அலையின் தாக்கம் இன்னும் 5 மாதங்களுக்கு இருக்க தான் செய்யும். இப்போது இருக்கிற முழு வீச்சு அக்டோபரில் தான் இறங்கும். அதற்குள் எத்தனை மக்கள் பாதிக்கப்படுவார்கள். எத்தனை பேர் இறப்பார்கள் என்பது தான் குலை நடுங்கும் விஷயமாக பார்க்க வேண்டியுள்ளது….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்