தமிழகத்தில் 8ம் கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தில் 8ம் கட்டமாக, நாளை (ஞாயிறு) 50 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து வருகிறது. நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, முதல் முகாம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடந்தது. கடந்த 30ம் தேதி 7வது கட்டமாக 30ம் தேதி 32 ஆயிரம் இடங்களில் 17.14 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ந்து வந்ததால் கடந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. இந்நிலையில் 8வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 14ம் தேதி (நாளை) ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். மேலும் இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறுகையில்: பொதுமக்கள் கேட்டுக் கொண்டதால் சனிக்கிழமை நடைபெற்று வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் இரண்டாம் தவணைக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இவை தவிர மருத்துவர் தலைமையிலான குழுவினர் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்