தமிழகத்தில் 3,971 பேருக்கு கொரோனா

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,10,494 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3,971 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 34  லட்சத்து 24 ஆயிரத்து 476 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,473 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 33 லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 77,607 ஆக உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 28 பேர் நேற்று உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 16 பேரும், தனியார் மருத்துவமனையில் 12 பேரும் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 37,837 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 742, கோவை 726 பேர் என இரண்டு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் கீழ் குறைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை