தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம், கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரையில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 20 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை:குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. …

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை