சென்னை: தமிழகத்தில், நேற்று புதிதாக 1,390 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சிகிச்சை பலனின்றி 27 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று, 1,390 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,74,233 ஆக உள்ளது. இந்நிலையில், 1,487 பேர் குணமடைந்தனர். கொரோனாவிற்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் கொரோனா இறப்பு 35,734 ஆக உள்ளது. மேலும், சென்னையில் 173 பேர், கோவையில் 145 பேர், செங்கல்பட்டில் 107 பேர் என 3 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….