தமிழகத்தில் 1,289 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,289 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,80,857 ஆக உள்ளது. நேற்று 1,421 பேர் குணமடைந்தனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று தனியார் மருத்துவமனையில் 8 பேரும், அரசு மருத்துவமனையில் 10 பேர் என 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் சென்னையில் 4 பேரும், கோவை, செங்கல்பட்டு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபரும் என 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 35,814 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மேலும், அதிகபட்சமாக நேற்று சென்னையில் 164 பேர், கோவையில் 137 பேர், செங்கல்பட்டில் 104 பேர் என 3 மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி