தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மாலை, விழுப்புரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தால் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழையும் பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும். ஜூலை 10 முதல் 12 வரை நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை முதல் மிகக் கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் கனமழையால் மண்சரிவு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. சென்னையில் அடுத்த இரு நாட்களில் சில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜூலை 9 முதல் 12 வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி