தமிழகத்தில் மிகவும் நேர்மையான அதிகாரியான சகாயம் ஐ.ஏ.எஸ் அரசு பணியில் இருந்து விடுவிப்பு

சென்னை: தமிழகத்தில் மிகவும் நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்த சகாயம் ஐ.ஏ.எஸ் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சகாயம் கடந்த சில மாதங்களுக்கு முன் விருப்ப ஓய்வு கடிதம் அளித்திருந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டார். முன்னதாக இவர் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்து தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளான சகாயம் ஐஏஎஸ், அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டு முக்கியம் இல்லாத தமிழ்நாடு அறிவியல் நகர துணை தலைவர் பதவியில் கடந்த 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தார். இவருக்கு இன்னும் 3 ஆண்டுகள் ஐஏஎஸ் பணியில் நீடிக்க முடியும். ஆனால், தமிழக அரசு தனக்கு தொடர்ந்து முக்கிய பதவிகள் எதுவும் வழங்காமல், தன்னை உதாசீனப்படுத்துவதாக கருதி அவர் விஆர்எஸ் கேட்டு கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி விண்ணப்பித்து இருந்தார். இதனை தமிழக அரசு ஏற்று தற்போது அவரை அரசு பணியில் இருந்து விடுத்துள்ளது. இந்தநிலையில் `மக்கள் பாதை’’ என்ற அமைப்புடன் இணைந்து சகாயம் ஐ.ஏ.எஸ் சமூக சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.  …

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்