தமிழகத்தில் மாவட்டங்களுக்கான தரவரிசை பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு

சென்னை : தமிழகத்தில் மாவட்டங்களுக்கான தரவரிசை பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதன் அடிப்படையில் சிறந்த மாநிலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் ஒன்றிய அரசு வெளியிட்டு வருகிறது. இதே போன்று மாவட்டங்களை தரவரிசை படுத்தும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக 38 மாவட்டங்களிலும் ஊராட்சி அளவில் கூட ஆய்வு செய்துள்ள சிறப்புத்திட்டமிடல் துறை அதிகாரிகள் தரவரிசை பட்டியலை தயாரித்திருக்கின்றனர். குறிப்பாக சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கு, விவசாயம், தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்குமுன் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம், நிலையான வளர்ச்சி இலக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்டங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது புதிதாக தயாரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான தரவரிசை பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பட்டியல் மாவட்டங்கள் இடையே ஆக்கப்பூர்வமான போட்டியை உருவாக்கி அனைத்துத்துறை வளர்ச்சிக்கு உதவும் என சிறப்புத்திட்டமிடல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.     …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்