தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

மதுரை: தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மதுரையில் விஞ்ஞான ரீதியாக திட்டமிட்ட தடுப்பு நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதாக கூறிய அவர், மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா பரவலை விரைந்து கட்டுப்படுத்த முடியும் என்றார். அனைத்து மாநிலங்களையும் பாகுபாடின்றி மத்திய அரசு பார்க்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதில் அரசியல் செய்ய கூடாது என கூறினார். மத்திய அரசின் மேலாண்மை குறைவு காரணமாக, தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தில் நிரந்தரமாக மருந்து தயாரிப்பு ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பட்ஜெட்டில் கூடுதல் நிதி அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி