தமிழகத்தில் பொதுத்தேர்வை நடத்துவதா? ஒத்திவைப்பதா?: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமை செயலர் ஆலோசனை.!!!!

சென்னை: 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக நேற்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.  தொடர்ந்து, இன்று 7 மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மே3-ம் தேதி நடைபெறவிருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் மொழிப்பாடம் மட்டும் மே 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறுவதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நடத்துவதா? ஒத்திவைப்பதா? என்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து, பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், பொதுத்தேர்வு நடைபெற இன்னும் சில நாட்கள் உள்ளதால் பின்னர் பொதுத்தேர்வு குறித்து அரசு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. * அரியானா மாநிலத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுதேதி அறிவிப்பின்றி ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.* ஒடிசா மாநிலத்தில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.* குஜராத் மாநிலத்தில். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.* பஞ்சாப் மாநிலத்தில் 5,8,10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை