தமிழகத்தில் பொங்கல் தொகுப்புடன் மண்பானை, மண் அடுப்பு வழங்க வேண்டும்: மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும்போது, மண்பானை, மண் அடுப்பு வழங்கி 40 லட்சம் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க தலைவரும் முன்னாள் நல வாரிய தலைவருமான சேம.நாராயணன் வெளியிட்ட அறிக்கை: தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக தாங்கள் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டு தமிழக மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு கொண்டு வருகிறீர்கள். அதனால், பொங்கல் தொகுப்போடு மண் பானை, மண் அடுப்பும் சேர்த்து வழங்கி 40 லட்சம் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை