தமிழகத்தில் புதிதாக 18 தொழிற்பூங்காக்கள்

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழில்துறை-பெருந்தொழில் கொள்கை விளக்கக்குறிப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது: 24 தொழிற்பூங்காக்களை தவிர சிப்காட் நிறுவனம் குமாரலிங்கபுரம், மணக்குடி, சக்கரக்கோட்டை, மாநல்லூர் நிலை-2, நெமிலி, மாம்பாக்கம், திருமுடிவாக்கம், அதகபாடி ஆகிய இடங்களில் 8 தொழிற்பூங்காக்கள், 5,603 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கி வருகிறது. மேலும் சிலாநந்தம், அல்லிக்குளம், கங்கைக்கொண்டான் நிலை-2, வேலாயுதபுரம், மேலமா, பனப்பாக்கம், சூளகிரி, குருபரப்பள்ளி நிலை-2, செங்காத்தாக்குளம், வல்லப்பாக்கம், மதுரமங்கலளம், இலுப்பைக்குடி, பூமாலைக்குண்டு, வண்டுவாஞ்சேரி, விருதுநகர், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி விரிவாக்கம் ஆகிய 18 புதிய தொழிற்பூங்காக்களை உருவாக்கிட சிப்காட் நிறுவனத்தால் நிலம் கண்டறிவது, கையகப்படுத்துவது போன்ற முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. நிலவங்கி உருவாக்கும் பணியை துரிதப்படுத்த, தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம் எளிமையாக்கப்படவுள்ளது. மாற்றுவகை நில எடுப்பு முறைகளான தனியார் பேச்சுவார்த்தை மற்றும் நிலச்சேர்க்கை ஆகிய முறைகளும் பின்பற்றப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்