தமிழகத்தில் நாளை முதல் 13-ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 13-ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10-ம் தேதி தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை,  டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. 11-ம் தேதி தென் தமிழகம், டெல்டா மற்றும் கோவை, திருப்பூரிலும் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. 13-ம் தேதிகளில் இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி  மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மழைக்கு வாய்ப்பில்லை எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. …

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு