தமிழகத்தில் தொடர்மழை காரணமாக 90 அணைகளில் நீர் மட்டம் 166.87 டிஎம்சியாக உயர்வு

சென்னை: தொடர் மழை காரணமாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 168.87 டிஎம்சியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இந்த மழை ஜனவரி 12ம் தேதி வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 90 அணைகளின் நீர் மட்டம் 166.87 டிஎம்சியாக (74.40 சதவீதம்) நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, 93.4 டிஎம்சி கொள்ள ளவு கொண்ட மேட்டூர் அணையில் 71.3 டிஎம்சியும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 25.4 டிஎம்சியும், 4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் 3.9 டிஎம்சியும், 6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் 3.7 டிஎம்சியும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 5.4 டிஎம்சியும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 5.4 டிஎம்சியும், 4.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணையில் 3.5 டிஎம்சியும், 1.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையில் 1.5 டிஎம்சியும், 13.4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பரம்பிகுளம் அணையில் 12 டிஎம்சி  என மொத்தம் 90 அணைகளில் 166.87 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது…

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை