தமிழகத்தில் திருத்திய மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் அமல்: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கவுள்ளது. இதனையடுத்து திருத்திய மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டி: தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி, மின் வாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி கொண்ட சார்ஜிங் பாயிண்ட் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 100 இடங்களில் பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதியுடன் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள  ஒரு லட்சத்து 45 மின் கம்பங்கள் தயாராக உள்ளன. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் 100 நாட்களில் வழங்கும் வகையிலான மாத இறுதிக்குள் முதலமைச்சர் தொடங்கி வைப்பார். மின் கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளது. எனவே புதிய மின் கட்டணம் அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. மின்வாரிய அதிகாரிகள் மீது புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில், அதிகாரிகள் தவறு செய்யாமல் கண்காணிக்க மின் வாரியத்தில் உள்ள 12 மண்டலங்களுக்கும் தலா மூன்று நபர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 36 நபர்கள் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்