தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

‘மாஜி’ தலைமை செயலாளர் கருத்து
மதுரை, அக். 17: வீரபாண்டிய கட்டபொம்மனின் 224வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள அவரின் திருவுருவ சிலைக்கு நேற்று மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் எம்.எல்.ஏ. தளபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில தணிக்கைகுழு உறுப்பினர் வேலுச்சாமி, உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் குழந்தைவேலு, செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், தனசெல்வம், அவைத்தலைவர் ஒச்சுபாலு, பொருளாளர் முருகவேல், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், முத்து கணேசன், செய்யது அபுதாஹிர், பகுதி செயலாளர்கள் தவமணி, சுபா கண்ணன், காவேரி, ராதாகிருஷ்ணன், பிகேசெந்தில், நெசவாளர் அணி அமைப்பாளர் வெள்ளத்துரை, கோரிப்பாளையம் சிந்து என்ற நாகேந்திரன், கவுன்சிலர் கார்த்திக், வட்ட செயலாளர்கள் யோகராஜ், ராஜேஷ், மகேந்திரன் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் ஆர்.எம்.ஆர். பாசறை சார்பில் அதன் தலைவரும் முன்னாள் தலைமை செயலாளருமான ராமமோகன்ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். குஜராத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. அதை போலவே இங்கும் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து