தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் குறைவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் குறைந்த நிலையில் நேற்று 480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 63,263 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 480 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி இதுவரை 34 லட்சத்து 48 ஆயிரத்து 568 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 1,464 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 34 லட்சத்து 3 ஆயிரத்து 402 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,164 ஆக குறைந்துள்ளது. தனியார்  மருத்துவமனையில் ஒருவர், அரசு மருத்துவமனையில் ஒருவர் என நேற்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, திருவாரூரில் தலா ஒரு நபர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்தம் 38,002 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர். சென்னையில் 126, கோவை 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 38 மாவட்டங்களில் பாதிப்பு 130க்கும் கீழ் குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை