தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும்: தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பேச்சு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும் என தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், சுகாதார செயலாளர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்; கொரோனா தொற்று தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது; தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றால் மெத்தனப் போக்கை கடைபிடிப்பது கொரோனா அதிகரிக்க வழி செய்யும். கொரோனா தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசன் அணிவது கட்டாயம். தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.  நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஏப்.2 வரை தமிழகத்தில் 31.75 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏப்.3-ம் தேதி வரை மத்திய அரசிடம் இருந்து 54,78,720 கொரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவர்களுக்கு இதுவரை ரூ.2,58,98,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அதிகமான படுக்கை வசதிகள், பிராணவாயு கருவிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் 846 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் 100% RT-PCR பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பற்றிய தகவல்களை பெற 104 என்ற எண்ணில் 24 மணி நேரமும் அணுகலாம் என கூறினார்….

Related posts

மின்சார ரயில்கள் ரத்து காரணமாக ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் 175 காவல் அதிகாரிகள் தலைமையில் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் : பயணிகளுக்கு ஆலோசனை

வாகன தணிக்கையின் போது உரிய ஆவணமில்லாத ₹14.75 லட்சம் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை

ரோந்து பணியில் ஈடுபட்ட ஏட்டு மீது தாக்குதல்: போதை ஆசாமி கைது