தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,812 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு: தொற்றில் இருந்து 11,154 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று 2,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,33,966. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,46,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,48,419. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 81,01,593 பேர் வந்துள்ளனர். சென்னையில் 546 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 2,266 பேருக்குத் தொற்று உள்ளது.* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 264 தனியார் ஆய்வகங்கள் என 333 ஆய்வகங்கள் உள்ளன.இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 47,643.* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 6,20,38,395.* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை: 1,02,104.* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 34,33,966.* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,812* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 546.* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 7293.* தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,679 பேர். பெண்கள் 1,133 பேர். மூன்றாம் பாலினத்தவர் யாருமில்லை.* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 11,154 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 33,48,419 பேர்.* இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 17 பேர் உயிரிழந்தனர். 7 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 10 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,904 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 9042 பேர் உயிரிழந்துள்ளனர்….

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை