தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,671 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,286 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2,671 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 34,98,992 ஆக அதிகரித்துள்ளது.இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 2,516 பேர் குணமடைந்த வீடு திரும்பிய நிலையில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 34,42,122 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,028 ஆக உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 844 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு 465, திருவள்ளூரில் 161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 18,687 தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை