தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 44 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை : 58 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று 44 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக கட்டுக்குள் உள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு 50-க்கும் கீழே பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-தமிழகத்தில் இன்று புதிதாக 16 ஆயிரத்து 524 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 25 பேரும், பெண்கள் 19 பேரும் உள்பட 44 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 28 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும் உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.தமிழகத்தில் தொடர்ந்து 57-வது நாளாக கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  58 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 107 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்