தமிழகத்தில் ஏப்ரல் 2ம் தேதி முதல் 37 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வெளுத்து வாங்குமாம் : வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தமிழகத்தில் ஏப்ரல் 2ம் தேதி முதல் 20 இடங்களில் வெப்பநிலை 37 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2 முதல் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீச சாத்தியக்கூறுகள் உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர்,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கடலூர், சேலம் ,தர்மபுரி, கிருஷ்ணகிரி ,கள்ளக்குறிச்சி, நாமக்கல் ,கரூர் ,திருச்சி, பெரம்பலூர் ,அரியலூர் ,மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையானது இயல்பை விட 36 முதல் 37 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அத்துடன் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை தமிழகம் , புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாகக் காணப்படும் . அதிகபட்ச வெப்பநிலை 35 குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்டு ரவுடி தற்கொலை முயற்சி

டாஸ்மாக் கடைகளில் 8 மணிநேர வேலை அமல்படுத்த ஷிப்ட் முறை வருகை பதிவேடு: பணியாளர் சங்க செயற்குழு வலியுறுத்தல்

கோயம்பேடு மார்க்கெட் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்