தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நிறைவு: உள்ளாட்சி பணிகளுக்கான ஒன்றிய அரசு மானியங்கள் இனி தடையின்றி கிடைக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டிருப்பதால், உள்ளாட்சி அமைப்புகளின் செலவுகளுக்காக ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய மானியங்கள் இனி தடையில்லாமல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டாலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டு காலத்தில் தேர்தல் நடத்தப்படாததால், உள்ளாட்சி பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. தவிர, உள்ளாட்சி பணிகளுக்காக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய மானியங்களும் நிறுத்தப்பட்டன. நிதித்துறை அதிகாரிகளின் தகவலின் படி, 2017 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுவரை, ரூ.2,029.35 கோடி வரை உள்ளாட்சி பணிகளுக்கான மானியங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் 2019-2020 ஆம் ஆண்டில் 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, தமிழக அரசுக்கு நிலுவை வைக்கப்பட்ட அடிப்படை மானியத் தொகை மட்டும் ரூ.4,345.57 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி பணிகளுக்கான மானியத்தை ஒதுக்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிய போது, உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக முடிக்கப்படாதவரை நிதி ஒதுக்குவது கடினம் என கூறியதாகவும், இனி நிலுவையில் இருக்கும் நிதி விரைவில் வந்து சேரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும் நிதித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக முடிக்கப்படாததால் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஒரு பகுதி நிதியை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.         …

Related posts

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்