தமிழகத்தில் இன்றும், நாளையும் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: குமரிக்கடல் பகுதியில் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாகவே தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரக்கூடிய நிலையில், அடுத்த இரண்டு தினங்களுக்காக வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இருக்க கூடிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கரூர், மதுரை, ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகம், சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நகரின் வெப்பநிலை சராசரியாக 33 முதல் 34 டிகிரி செல்சியாஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 13 செ.மீ. மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 10 செ.மீ. மலையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடலின் தெற்கு பகுதியில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்