தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றலைகளால் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் வடகிழக்கு பருவமழை, இந்த மாதத்தின் நடுப்பகுதி வரை நீடித்தது. வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை கொட்டியது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றலைகளால் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியதாவது; கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை புறநகரை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சூறைக்காற்று வீசுவதால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை