தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க சேலம் மாநாட்டில் அணி திரள்வோம்: சிவகாசி மாநகர திமுக செயலாளர் பேச்சு

 

சிவகாசி, ஜன.20: சேலம் மாநாட்டில் அணி திரள்வோம். மாநில உரிமை மீட்போம் என சிவகாசி மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் பேசினார். தமிழக நிதியமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான தங்கம்தென்னரசு ஆலோசனையின்படி சிவகாசி மாநகர் திருத்தங்கல் 3வது பகுதி 10, 11, 18, 19 ஆகிய வட்டங்களில் சிவகாசி திமுக மாநகர செயலாளர்எஸ்.ஏ.உதயசூரியன் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, சேலத்தில்நடைபெறவுள்ள மாநாடு தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் மாநாடாக நடப்பதால், சிவகாசி மாநகர திமுகவினர் அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் சேலம் மாநாட்டில் அணி திரள்வோம். மாநில உரிமை மீட்போம். ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய நிதி உரிமை, கல்வி உரிமை ஆகியவற்றை மீட்டெடுக்கும் மாநாடாக இம்மாநாடு அமைய வேண்டும். எனவே, அனைத்து நிர்வாகிகளும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தோடு பங்கேற்று மாநாட்டை வெற்றிகரமாக வழி நடத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை 10வது வட்ட கழக செயலாளர் கருப்பசாமி, 11வது வட்ட கழக செயலாளர் செல்வபாண்டியன், 18வது வட்ட கழக செயலாளர் முருகேசன், 19வது வட்ட கழக செயலாளர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர். மண்டல தலைவர் குருசாமி, பகுதி கழக செயலாளர் மாரீஸ்வரன், மாவட்ட பிரதிநிதி ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்