தன்னை பற்றி பாலியல் புகார் கூறியதால் கையை அறுத்து மாணவி தற்கொலை முயற்சி: சென்னை பல்கலையில் பரபரப்பு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள், தங்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கப்பட்டதை கண்டித்து, பல்கலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக  நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அதன்படி மதிப்பெண் வழக்காததால், மீண்டும் பல்கலை நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். அதில் 4 பேர் நேற்று பல்கலை நிர்வாகத்தால் சஸ்ெபண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், தொல்லியல் துறையை சேர்ந்த மாணவி ஒருவர் மீது, பாலியல் அத்துமீறல் என்ற வகையில் அந்த துறையின் தலைவர் பல்கலை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அவமானம் தாங்காமல் நேற்று முன்தினம் திடீரென கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.  இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணரவர்கள், அந்த மாணவியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை அந்த மாணவி மீண்டும் பல்கலைக் கழகத்திற்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றார். தகவலறிந்த மாணவியின் பெற்றோர், சென்னை வந்து பல்கலைக் கழகத்தில் இருந்த மாணவியை பார்க்க முயன்றனர். ஆனால், அங்கு இருந்த போலீசார் பெற்றோரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், அந்த போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களை இழுத்து பல்கலை நுழைவாயிலுக்கு வெளியில் தள்ளினர். இதனால், பல்கலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை: மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்