தன்னலம் கருதாமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

சென்னை: கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவனை அமைப்பது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர். தென் சென்னையில் ரூ.250 கோடியில்  பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.  500 படுக்கைகள் வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைப்பதால் தென் சென்னை மக்கள் பயன்பெறுவர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தன்னலம் கருதாமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினால்  தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்த்துள்ளார். சில நோயாளிகள் உயிர் இழக்க நேரிடும்போது மருத்துவர்களை தாக்கியுள்ள சம்பவங்கள்  சில இடங்களில் நடந்துள்ளது. கொரோனா பேரிடர் சூழலை தவறாக பயன்படுத்தும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில்  கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார். மத்திய அரசிடம் இருந்து ஜூன் மாதத்துக்கு இன்னும் 36 லட்சம் தடுப்பூசிகள் வர வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு