தனுஷ்கோடியில் விபத்தில் சிக்கிய அரசு பஸ் மீட்பு..!

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசு நகர் பேருந்து தடுப்புச்சுவரை தாண்டி சென்று மணலில் புதைந்து நின்றது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு தனுஷ்கோடிக்கு சென்ற அரசு நகர்பேருந்து ஒன்று அங்கு பயணிகளை இறக்கி விட்டு அங்கிருந்து ராமேஸ்வரம் திரும்பியது. வரும் வழியில் தனுஷ்கோடிக்கும் முகுந்தராயர் சத்திரம் கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆமைகுஞ்சு பொறிப்பகம் அருகே வந்த போது எதிரில் வேகமாக வந்த தனியார் வாகனம் ஒன்று பேருந்து மீது மோதுவதுபோல் வந்ததால் ஓட்டுனர் நகர் பேருந்தை இடதுபக்கம் ஓரமாக செலுத்தினார். இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் கற்களால் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரையும் தாண்டி மணல் பரப்பில் டயர் புதைந்து நின்றது. ஒரு சில பயணிகளே பேருந்தில் இருந்ததால் யாருக்கும் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும் அப்பகுதியில் வேறு வாகனங்கள் எதுவும் வராததால் பெரியளவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. சிறிது நேரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து தனியார் சரக்கு ஏற்றும் வாகனத்தில் சென்ற மீனவர்கள் உதவியுடன் மணலில் புதைந்த நகர்பேருந்து மீட்கப்பட்டு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தது. ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு இயக்கப்படும் பல பேருந்துகள் நன்கு ஓடக்கூடிய நிலையில் இல்லை என்று கூறப்படுவதால் புதிய பேருந்துகளை இயக்குவதற்கும், தனுஷ்கோடி சென்று திரும்பும் வழியில் குறிப்பிட்ட இடத்தில் பேருந்து நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் பேருந்து நிறுத்தம் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியறத்தி வருகின்றனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்