தனியாா் பள்ளிகளில் 235 பேருந்துகள் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் 235 பேருந்துகள்  ஆய்வு செய்யப்பட்டன.அகத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டதை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பேருந்துகள் திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் உள்ள மாவட்ட காவல்துறை ஆயுதப்படை திடலில் நடைபெற்றது. இந்த  ஆய்வில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகேர்லா செபாஸ் கல்யாண் கலந்து கொண்டு வாகனங்களின் உரிமங்கள், ஓட்டுநா் உரிமங்கள், ஆவணங்கள், வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள், முதலுதவி ஏற்பாடு உள்ளிட்ட 16 அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து. வாகனங்கள் தீப்பற்றி எரிந்தால் தீயை கட்டுப்படுத்துவது குறித்து  தீயணைப்பு வீரர்கள் மூலம் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.  மேலும் குறைபாடுகள் உள்ள வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, மறு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஆய்வின்போது திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோகன், திருவள்ளூர் கோட்டாட்சியர் ரமேஷ், தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் பாஸ்கர், ஏடிஎஸ்பி ஜேசுதாஸ், வட்டாட்சியர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.கும்மிடிப்பூண்டி : பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி  வாளகத்தில்  பள்ளி வாகனங்களை பொன்னேரி கோட்டாட்சியர் சோதனை செய்து ஆய்வு நடத்தினார். விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களுக்கு சாலையில் செல்ல தடை உத்தரவிட்டார்.கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டி பகுதியில் உள்ளது வேலம்மாள் தனியார் பள்ளி விளையாட்டு மைதானம். இங்கு,  செங்குன்றம் வட்டார போக்குவரத்து மற்றும் கும்மிடிப்பூண்டி துணை வட்டார போக்குவரத்துக் உட்பட்ட பகுதிகளான பொன்னேரி, மீஞ்சூர், செங்குன்றம், வடகரை, புழல், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, வெங்கல், கும்மிடிப்பூண்டி பஜார், ஆரம்பாக்கம், புதுவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் 34 பள்ளிகளில் உள்ள 400 தனியார் பள்ளி வாகனங்கள் நேற்று சோதனை  செய்யப்பட்டது. இதில், பொன்னேரி கோட்டாட்சியர் காயத்ரி பாலசுப்ரமணி, குழந்தைகள் பாதுகாப்பு கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது,  வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, வேக கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஆர்எஸ் கருவி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும், அத்தோடு பள்ளி வாகன கதவுகள், அவசரகால வழி, ஓட்டுநர்களின் இருக்கைகள் அருகே தீயணைப்பு உபகரணங்கள். இரண்டு செட், முதலுதவி பெட்டி, உபகரணங்கள் என அனைத்தும்  முறையாக உள்ளதா என அதிரடியாக சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து,  சில வாகனங்களில் மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாத நிலையைக் கண்டு கோட்டாட்சியர் காயத்ரி பாலசுப்ரமணி அதிர்ச்சி அடைந்தார். மேலும், வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பான் கருவிகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர்  சம்மநதப்பட்ட வாகனங்கள் மீது உடனடியாக சாலையில் செல்ல தடை சான்று வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிகழ்வில்,  செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன், ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜராஜேஸ்வரி, கருப்பையன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மோகனா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சோதனையில் அனைத்து ஓட்டுநர்களுக்கும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பின்னர், இதுகுறித்து நிருபர்களிடம்  பேசிய அதிகாரிகள், விதிமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.  மேலும், 5 ஆண்டுகள் அனுபவம் இல்லாத ஓட்டுனர்களை பணியமர்த்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவும், இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்….

Related posts

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

ஆடி பட்டத்தில் பணியை துவக்கிய விவசாயிகள்

பூங்கா செல்லும் சாலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றும் பணி துவக்கம்