தனியார் மருத்துவமனையில் பூனைகளை கொன்றதாக காவல் துறையில் புகார்

தாம்பரம்: தாம்பரம் மேம்பாலம் அருகே தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், இந்த மருத்துவமனையில் உள்ள பூனைகளை, மருத்துவமனை ஊழியர்கள் துன்புறுத்தி பிடித்து சென்று கொன்று விட்டதாக கூறி தாம்பரம் காவல் நிலையத்தில் விலங்கின ஆர்வலர்கள் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து நிர்வாகம் சார்பில் கூறுகையில், ‘‘மருத்துவமனைக்கு வரும் நோயகளிடம் பூனைகள் தொந்தரவு அளித்து வந்ததாக பலர் புகார்கள் தெரிவித்தனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பூனையை கண்ட ஊழியர்கள் உடனடியாக பூனையை பிடித்து வேறு இடத்தில் கொண்டு விடவேண்டும் என்ற நோக்கத்துடன் பிடித்துச் சென்று வேறு பகுதியில் விட்டனர்,’’ என்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை