தனியார் பஸ்சை சிறை பிடித்து மக்கள் போராட்டம்

 

திருச்செங்கோடு, செப்.11: பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லாத தனியார் பஸ்சை பயணிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு -சேலம் பிரசான சாலையில், சின்னதம்பிபாளையம் பகுதியில் இருந்து தினந்தோறும் பலர் வேலை மற்றும் தொழில் நிமித்தமாக சேலம் சென்று வருகின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பொதுமக்கள் பஸ்களில், ஏறவோ இறங்கவோ முடிவதில்லை. சேலத்தில் இருந்து வரும் தனியார் மற்றும் அரசு பஸ்கள், சின்னதம்பிபாளையத்தில் நிறுத்துவது இல்லை எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 2 குழந்தைகளுடன் வந்த பெண்ணை, தனியார் பஸ் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிற்காமல், வேறு பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றதால், ஆவேசமடைந்த பொதுமக்கள் மீண்டும் வந்த பஸ்சை சிறை பிடித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் பயணிகள் இனி பஸ்சை, உரிய நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி, செல்வோம் என்று எழுதிக் கொடுக்கும் வரை பஸ்சை விடமாட்டோம் என கூறினார்கள். இதை தொடர்ந்து, எழுதி கொடுத்த பின்னர் தான், பஸ்சை பயணிகள் விடுவித்தனர். மேலும் வேகத்தடை அமைக்க வேண்டும், பஸ்கள் நின்று செல்ல அறிவுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை