தனியார் நிலங்களிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர கழிவுகளை விற்பனைக்காக அகற்ற தடை

மதுரை: தனியார் நிலங்களிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர கழிவுகளை விற்பனை நோக்கில் அகற்றத் தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன்.காந்திமதிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் தாலுகா தாப்பாத்தி கிராமத்திலுள்ள உப்பாற்று ஓடையில் தனியார் பட்டா நிலங்களில் வைப்பாறு வளத்தை பாதித்திடும் வகையிலும், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் வகையிலும் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன அதை அரசே விற்க  உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘ஸ்டெர்லைட் போன்ற சில ஆலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் மற்றும் தாமிர கழிவுகள் அபாயகரமான கழிவுகளா, சாதாரண வகையிலான கழிவுகளா என்பது தொடர்பான பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  உச்சநீதிமன்றத்தின் முடிவு வரும் வரை தனியார் நிலங்களில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தாமிர கழிவுகளை விற்பனை நோக்கத்தில் அகற்ற இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’ எனக் உத்தரவிட்டனர்….

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு