தனியார் நிறுவனம் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கழிப்பறை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சாத்தமை கிராமத்தில் தனியார் உயிர்காக்கும் மருந்து மூலக்கூறு தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் சார்பில் கருங்குழி அடுத்த ஞானகிரீஸ்வரன்பேட்டை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு  ₹3.48 லட்சத்தில் புற நோயாளிகளுக்கான சுகாதார வளாகத்தை 2021-22 சமூக பொறுப்பு நிதியின் கீழ் அமைத்து கொடுத்தது. இதனை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் பிரியா, மருத்துவர் பானு, தனியார் நிறுவன அதிகாரிகள் கண்ணன், சுதாகர் ராவ், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்நிறுவனம், கிராமப்புற கல்வி மேம்பாடு இலவச மருத்துவ முகாம்கள், சுத்தமான,  பாதுகாப்பான குடிநீர் நிலையங்களை அமைத்தல், அங்கன்வாடி நிலையங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்குதல், ரேஷன் கடைகளுக்கு கட்டிடங்கள் அமைத்து கொடுத்தல் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்கிறது….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு