தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை

விக்கிரவாண்டி, ஜூன் 7: விக்கிரவாண்டி அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். விக்கிரவாண்டி அடுத்த வீடுர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் அருண்குமார் (25), இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு லோன் வசூல் செய்யும் வேலை செய்து வந்தார். இவர் வீட்டு லோன் வசூல் பணத்தை நிறுவனத்தில் செலுத்தாததால் நிறுவன மேலாளர் வெங்கடேசன் திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருண்குமார் பெரியதச்சூர் எல்லையில் உள்ள மரப்பட்டரை அருகே பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனையறிந்த உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அருண்குமார் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அருண்குமார் தற்கொலைக்கு உரிய நீதி கேட்டு அவரது உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அருண்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்