தனியார் குடோன், வேனில் பதுக்கிய 11.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட கவரப்பேட்டை பஜார், சத்தியவேடு சாலை, ஏ.என்.குப்பம், புதுவாயல், பெருவாயல், ரயில்வே ஸ்டேஷன் சாலை, தெலுங்கு காலனி, யூனிட் நகர், கவரப்பேட்டை ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கவரப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆர்.என்.கண்டிகை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மினி வேன் நிற்பதாக கிடைத்த தகவல்படி, போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு கேட்பாரற்று நின்ற மினி வேனில் சோதனை செய்தபோது அதில் 1.5 டன் ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து, லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் யாருக்கு சொந்தமானது, ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்திவரப்பட்டது என விசாரிக்கின்றனர். புழல்: செங்குன்றம் அடுத்த பழைய அலமாதி எடப்பாளையம் சிவன் கோயில் அருகே செல்லும் சுடுகாட்டு சாலையில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சோழவரம் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் தனியார் குடோனுக்கு சென்று, அதிரடி சோதனை நடத்தினர். அதில் 50 கிலோ எடை கொண்ட 200 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அங்கு வேலை செய்து கொண்டிருந்த வட மாநிலத்தை சேர்ந்த அவினாஷ்குமார்(30), ஜெசி பசும்பொன்(38), பிரகாஷ்குமார்(33) ஆகியோரை கைது செய்து, 3 வேன், 2 மோட்டார் சைக்கிள்கள் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான குடோன் உரிமையாளர் புழல் பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்த ஜோஸ்வா என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா பெண்கள் 2 பேர் கைது

தமிழகத்தில் இருவேறு இடங்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 9 பேர் கைது

மும்பையில் இருந்து மொத்தமாக வாங்கிவந்து; சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6பேர் பிடிபட்டனர்