தனியார் கட்டிடத்தில் பயங்கர தீ

சென்னை: அண்ணா நகர் 5வது அவென்யூ பகுதியில் தனியாருக்கு சொந்தமான 3 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. இதன் தரை தளத்தில் தனியார் வங்கி, முதல் தளத்தில் சாப்ட்வேர் நிறுவனம், 2வது தளத்தில் வீட்டுக்கடன் வழங்கும் தனியார் வங்கி, 3வது தளத்தில் தனியார் சாப்ட்வேர் கம்பெனி ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த அண்ணாநகர், கோயம்பேடு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் தீ கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.  பின்னர் வேப்பேரி, வில்லிவாக்கம், அசோக் நகர், மதுரவாயல், கோயம்பேடு, செம்பியம், கீழ்ப்பாக்கம், ஜே.ஜே.நகர், அண்ணாநகர், எழும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தது. இதில் அனைத்து நிறுவனத்தில் இருந்த கம்ப்யூட்டர், டேபிள், சேர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. புகாரின்படி அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்தனர். அதில்,  முதல் தளத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்தது தெரியவந்தது.  …

Related posts

பால் குடித்துவிட்டு உறங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு கைக்குழந்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை

பிள்ளைகள் வளந்துவிட்டார்கள் என தொடர்பை துண்டித்ததால் பெண்ணை தீவைத்து கொளுத்திய கள்ளக்காதலன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை, காதலன், மருமகனுக்கும் தீக்காயம்

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து, காயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு