தனியார் ஊழியரிடம் ₹5.76 லட்சம் மோசடி

 

கிருஷ்ணகிரி, மே 31: கிருஷ்ணகிரி அடுத்த பாகலூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (47). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு, கடந்த பிப்ரவரி 28ம் தேதி, விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில், அதிகளவில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறியிருந்தது. இதையடுத்து, அதில் இருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு ரமேஷ் பேசியுள்ளார். பின்னர், அவர்கள் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக மொத்தம் 5 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், அவர்கள் கூறியபடி எந்தவித இரட்டிப்பு லாபமும் கிடைக்கவில்லை. மேலும், அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தவர், இதுபற்றி நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்