‘தனிமையில் இருந்ததால் தன்னிலை மறந்து போனார்’ பெண் அமைச்சு பணியாளருக்கு முத்தம் கொடுத்த தலைமை காவலர்

* ரத்தக்காயத்துடன் அலறியடித்து ஓடி வந்த அவலம்* வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்புசென்னை: வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பணியின்போது தனியாக இருந்த பெண் அமைச்சு பணியாளர் ஒருவரை, கட்டிப்பிடித்து உதட்டை கடித்து காவல் நிலைய எழுத்தர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சென்னை  வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்தராக தலைமை காவலர் வெங்கடேசன் பணியாற்றி வருகிறார். இவர், ஏற்கனவே கே.கே.நகர் பகுதியில் உளவுத்துறையில் பணியாற்றிய போது கஞ்சா வியாபாரிகள் மற்றும் பாலியல் தொழில் செய்யும் நபர்களுக்கு உதவியதாக சர்ச்சையில் சிக்கி அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டவர். தற்போது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் அமைச்சு பெண் பணியாளர் ஒருவர் வேலை செய்து வருகிறார். வெங்கடேசன் எழுத்தர் என்பதால், புகார்கள் மற்றும் வழக்கு தொடர்பாக விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவேற்ற வேண்டும். இதனால், அமைச்சு பெண் பணியாளர் இவரின் கீழ் வேலை செய்து வந்தார். பணியின்போது, பெண் அமைச்சு பணியாளரிடம், இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளில் தான் வெங்கடேசன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும்  இன்ஸ்பெக்டர்கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே காவல் நிலையத்தில் பெண் அமைச்சு பணியாளர் தனியாக இருந்துள்ளார். அப்போது எழுத்தர் வெங்கடேசன்,வழக்கு தொடர்பான விவரங்கள் கம்ப்யூட்டரில் அடிக்க வேண்டும் என்று கூறி அருகில் அமர்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் ‘தன்னை மெய்மறந்த’ வெங்கடேசன் தான் வகித்து வந்த காவல் நிலைய எழுத்தர் என்ற பதவியை மறந்து, பெண் அமைச்சு பணியாளரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் பணியாளர் அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது வெங்கடேசனின் பற்கள் பெண் பணியாளரின் உதட்டை காயப்படுத்தியது’. இதனால் உதட்டில் ரத்தம் சொட்டும் நிலையில், அலறியபடி அறையில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார்.  பிறகு வெங்கடேசன், அந்த பெண் பணியாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், தனக்கு நடந்த சம்பவத்தை பெண் அமைச்சு பணியாளர் தெற்கு மண்டல இணை கமிஷனர் நரேந்திரன் நாயரிடம் நேரடியாக சென்று எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அதன்படி இணை கமிஷனர் உடனே எழுத்தர் வெங்கடேசனை அதிரடியாக எம்.ஜி.ஆர். நகர் காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். காவல் நிலையத்தில் பெண் பணியாளருக்கு தலைமை காவலர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துறை ரீதியிலான விசாரணை: காவல் நிலையத்தில் பெண் அமைச்சு பணியாளர் ஒருவர், தலைமை காவலர் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆன சம்பவம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கவனத்திற்கு சென்றது. உடனே, அவர் உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து அமைச்சு பெண் பணியாளர் கொடுத்துள்ள புகாரின்படி துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி இணை கமிஷனர் நரேந்திரன் நாயர் பாலியல் ரீதியாக நடந்து கொண்ட தலைமை காவலர்  வெங்கடேசனிடம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையில் வெங்கடேசனுக்கு  எதிராக முக்கிய ஆதாரங்கள் இருப்பதாகவும், வெங்கடேசன் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக இயங்கும் மசாஜ் சென்டர்களை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. அதேநேரம், பாதிப்புக்குள்ளான பெண் பணியாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் அளிக்கும் விசாரணை அறிக்கையின்படி போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ்  வட்டாரத்தில் இருந்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது….

Related posts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் குற்றங்களை தடுக்க 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: 24 மணிநேரமும் புகார் அளிக்க சிறப்பு எண்கள்; ஆலோசனைக்குப்பின் கமிஷனர் அருண் நடவடிக்கை

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைவு

வலையில் சிக்கி உயிருக்கு போராடிய ஆமையை காப்பாற்றிய கடலோர காவல்படை