தனலட்சுமி சீனிவாசன் பல்கலை. வேந்தர் சீனிவாசனுக்கு ஜமாலியன்-2024 விருது: திருச்சியில் 11ம் தேதி வழங்கப்படுகிறது

பெரம்பலூர், ஜூலை 5: திருச்சி ஜமால்முகமது கல்லூரியின் நிறுவனர் நாள் விழாவை முன்னிட்டு ஜமாலியன்-2024 விருது பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசனுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான அழைப்பிதழை ஜமால்முகமது கல்லூரி முதல்வர் நேரில் வழங்கினார்.
திருச்சியில் புகழ்பெற்ற கல்லூரிகளுள் ஒன்றான ஜமால் முகமது கல்லூரியில் ஜனாப் காஜாமியான் இராவுத்தர் மற்றும் ஜமால் முகமது சாஹிப் ஆகியோரால் 11.7.1951 (புதன்கிழமை) அன்று ஜமால் முகமது கல்லூரி நிறுவப்பட்டது. அந்நாளை நினைவுக்கூறும் வகையில் நிறுவனர் நாள் விழாவும், தற்போது ஜமால் முகமது கல்லூரியின் முதன்மைக் கட்டடமாக இயங்கி வரும் ஹாஜி ம. ஜமால் முஹ்யித்தீன் கட்டட நூற்றாண்டு விழாவும் வருடந்தோறும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இவ்விழா 11.07.2024 (வியாழக்கிழமை) அன்று ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ளது. தற்போது 2024 ம் ஆண்டிற்கான ஜமாலியன் விருதினை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ. சீனிவாசன் அவர்களுக்கு வழங்க ஜமால் முகமது கல்லூரியின் நிறுவனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இவ்விருதானது கல்வி சாம்ராஜ்யத்தை உருவாக்கி பின் தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியமைக்காக பாராட்டி வழங்கப்படுகிறது. இவ்விருதினை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ. சீனிவாசன் அவர்கள் விருது பெறுவதற்கு முறையாக தன்னாட்சி பெற்ற ஜமால் முகமது கல்லூரியின் முதல்வர் முனைவர் து.அ. ஜார்ஜ் அமலரத்தினம், முன்னாள் முதல்வர் ஆகியோர் நேரில்அழைப்பிதழ் வழங்கி விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். வருகின்ற 11.7.2024 அன்று “ஜமாலியன் – 2024” விருதினைப் பெறுவதற்கு மாண்பமை வேந்தர் அ.சீனிவாசன் இசைந்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை