தனது வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று வர அனுமதி வழங்க வேண்டும்: விவசாயி ஒருவர் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன புகார் மனு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேவுள்ள கே. அக்ரஹாரம் மேல் தெருவை சேர்ந்த கணேசன்( 57) என்ற விவசாயி தனது வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று வர தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என தனது குடும்பத்துடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூதன புகார் மனு அளித்துள்ளார்.இது குறித்து விவசாயி கணேசன் கூறும்போது; தன்னுடைய  வீட்டிற்கு காலகாலமாக சென்று வந்த வழிப்பாதையை வீட்டருகே உள்ளவர்கள்  நாலாபுறமும் அடைத்தும், தடுப்பு சுவர் கட்டிவிட்டதால் தனது சொந்த வீட்டிற்கே சென்று வர முடியவில்லை. வேறு வழயில்லாமல் கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக உறவினர் ஒருவரது வீட்டில் தஞ்சமடைந்திருப்பதாகவும், தனது பிரச்சனை தொடர்பாக சம்மந்தபட்ட காவல்துறை, வருவாய்த்துறை  உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கும் விவசாயி கணேசன் தரை வழியில் தான், தனது வீட்டிற்கு சென்று வர முடியவில்லை ஆகாய மார்கமாக வான்வழியாக  ஹெலிகாப்ட்டரிலாவது  சென்று வர தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என புகார் மனு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.பொம்மை ஹெலிகாப்ட்டரை கையில் பிடித்தபடி விவசாயி தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் புகார் மனு அளிக்க வந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!