தனது மனைவியின் தோற்றத்தை கிண்டல் செய்த நகைச்சுவை நடிகரின் கன்னத்தில் “பளார்” என அறைந்த வில் ஸ்மித்: ஆஸ்கர் விழாவில் பரபரப்பு!!

வாஷிங்டன் : ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்  நடிகர் வில் ஸ்மித், நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கினை மேடையிலேயே தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற வில் ஸ்மித்தின் மனைவி, முடி உதிர்தல் தொடர்பான அலோபீசியா நோயால் தலையில் முடியின்றி காணப்பட்டார். இந்த நிலையில்விழாவின் போது, சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினை வழங்க பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் மேடைக்கு வந்தார். அப்போது வில் ஸ்மித்திடம் பேசிய அவர், ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் சிகை அலங்காரம்  குறித்து விமர்சித்தார்.  1997ம் ஆண்டில் வெளியான ஜி.ஐ. ஜேன் திரைப்படத்தில் நடித்த நடிகை டெமி மூரின் சிகை அலங்காரத்துடன் ஒப்பிட்டு அவரை கேலியாக பேசினார். இதனால் கோபம் அடைந்த நடிகர் வில் ஸ்மித், மேடைக்கு சென்று கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.வில் ஸ்மித் தனது இருக்கைக்கு திரும்பிய பின்னரும் ராக் விமர்சித்ததை தொடர்ந்தார். இதனால் ஆத்திரத்தில் உச்சிக்கு சென்ற ஸ்மித், அங்கிருந்தபடியே “என் மனைவியின் பெயரை உன் வாயிலிருந்து விலக்கிவிடு’ என மோசமான வார்த்தைகளால் கிறிஸ் ராக்கினை யேசினார்….

Related posts

ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் உள்ளதாக தகவல்? அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிசை நிறுத்துங்கள்: அமெ. மூத்த ஊடகவியலாளர் வலியுறுத்தல்

நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் – ரஷ்யா போரை ஒரேநாளில் நிறுத்தி விடுவேன்: டிரம்ப் சூளுரை

இம்ரான்கானின் மனைவிக்கு முன்ஜாமீன்