தந்தை பெரியார் மணியம்மை கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டு பயிற்சி

திருச்சி, ஜூலை 4: திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மொத்தம் உள்ள 1420 இடங்களுக்கு மாணவர்கள் 14,669 பேரும், மாணவிகள் 11,082 பேரும் என மொத்தம் 25,751 பேர் விண்ணப்பத்திருந்திருந்தனர். அதில் 1420 பேர் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை படிப்பிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை மாணவர்களுக்கான “வழிகாட்டும் பயிற்சி நிகழ்வு” நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த்துறை இணை பேராசிரியர் சங்கரநாராயணன் வரவேற்றார்.

முதல்வர் வாசுதேவன் தலைமை உறையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மாவட்ட கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பொன்.முத்துராமலிங்கம் மாணவர்களிடம் பேசுகையில், முதலாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது நாம் ஒவ்வொரு அடியையும் மிக கவனமுடனும், பயத்துடனும் எடுத்து வைக்க வேண்டும். நமக்கு கிடைத்த வாய்ப்பு இங்கு பலருக்கு கிடைக்காமல் போய்விட்டது. எனவே கல்லூரியில் உங்கள் வாழ்வின் லட்சியத்தினை அடைவதற்கான பாடசாலையாக மாற்றிக்கொள்ளுங்கள். எந்த துறையை சேர்ந்த மாணவர்களாக இருந்தாலும், அந்த துறையில் சிறந்து விளங்குவதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதையே விரும்புங்கள், அதை தொடருங்கள் என்று பேசினார். இறுதியாக இயற்பியல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை தமிழ் இணைப் பேராசிரியர் குணசேகரன் தொகுத்து வழங்கினார். இதில் முதலாமாண்டு மாணவர்கள் 1420 பேர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை