தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தொமுச சார்பில் திமுக பிரமுகர் கே.ஜே.அகத்தியன் நினைவு தண்ணீர் பந்தல் திறப்பு விழா காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் நடந்தது. செயற்குழு உறுப்பினர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். தொமுச மாவட்ட தலைவர் கே.ஏ.இளங்கோவன், மாவட்ட செயலாளர் சுந்தரவதனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக காஞ்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் மண்டல தலைவர் சந்துரு, தலைமை பேச்சாளர் நாத்திகம் நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், ஆட்டோ சங்கத் தலைவர் திருநாவுக்கரசு, ஆட்டோ சங்கர், செயலாளர் அமித்பாஷா, துணை செயலாளர், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

பெண் டாக்டர் தற்கொலை