தண்ணீர் தொட்டியில் குளித்த பெண் வழுக்கி விழுந்து பலி

வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே கரைப்பாளையம் பூலான் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (56). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பான்மதி (47). இவர்களுக்கு ரத்தினம் என்ற மகனும், மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் இளங்கோ நகர் வெள்ளத்தாரையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது பான்மதி தனது கணவர் லோகநாதனிடம் எனது தாயை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறி விட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற லோகநாதன் மனைவி பான்மதி திரும்பி வராததால் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தார். அப்போது வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் நேற்று முன்தினம் பான்மதி மாலை குளித்துவிட்டு துணி மாற்றும்போது திடீரென மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே பான்மதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து லோகநாதன் வேலாயுதம் பாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை