தண்ணீர் தேடி ஊருக்குள் வந்து நாய்களிடம் சிக்கிய புள்ளிமான் மீட்பு

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் காப்பு காட்டில், தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், தண்ணீர் தேடி மான்கள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், தண்ணீர் தேடி ஆண் புள்ளிமான் ஒன்று காட்டை விட்டு வெளியேறியது. சாமிபுரம் கிராமத்தில் சுற்றி வந்த அந்த மானை தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன. இதனைக் கண்ட கிராம மக்கள், விரைந்து சென்று மானை மீட்டனர். பின்னர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், வனச்சரகர் சுகுமார், வனவர் ஈஸ்வரன் மற்றும் வேட்டை தடுப்பு குழுவினர் விரைந்து சென்று மானை மீட்டனர். பின்னர், வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, வனத்துறை மருத்துவர் பிரகாஷ் முன்னிலையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, அய்யூர் வனப்பகுதியில் விடப்பட்டது….

Related posts

நாகர்கோவிலில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சம்

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு